சான்றிதழில் பிரதமர் படம்

ஆர்.டி.ஐ ஆர்வலர் பீட்டர் மயிலிபரம்பில், ஒரு தனியார் மருத்துவமனையில் தான் பணம் செலுத்தி போட்டுக்கொண்ட கொரோனா தடுப்பூசிக்கான சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அவரின் புகைப்படம் இல்லாமல் எனக்கு சான்றிதழ் வேண்டும் என கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த  நீதிபதி பி.வி. குன்னிகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு, “அவர் நமது நாட்டின் பிரதமர், வேறு எந்த நாட்டின் பிரதமர் அல்ல. நமது தேர்தலில் போட்டியிட்டு வாக்குகளை பெற்றே சட்டப்படி ஆட்சிக்கு வந்துள்ளார். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக மட்டுமே  இதனை நீங்கள் கோரமுடியாது. நமது பிரதமரின் புகைப்படம் சான்றிதழில் இடம் பெறுவதால் நீங்கள் ஏன் வெட்கப்படுகிறீர்கள்?  100 கோடி மக்களுக்கும் இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்கள்.  டெல்லி ஜவஹர்லால் நேரு தலைமை கழகத்தின் மாநில அளவிலான பயிற்சியாளராக பணிபுரியும் நீங்கள் அதில் உள்ள நேருவின் பெயரை நீக்க ஏன் கோரவில்லை? என கேள்விகள் கேட்டனர்.