மத்திய அரசின் திட்டங்களுக்கு சுடச்சுட ஸ்டிக்கர் ஒட்டி அதனை தங்கள் சாதனையக காட்டிக்கொள்ளும் திராவிட மாடல் அரசு, சூடானில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு உதவுகிறோம் என கூறிக்கொண்டு, அதற்காக கட்டுப்பாட்டு அறை திறப்பது, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவது என மீண்டும் ஒரு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை துவக்கியுள்ளது. இந்த சூழலில், போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து மீட்கப்பட்ட 360 பாரத சமூகத்தினருடன் சௌதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து வந்த சிறப்பு விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. சூடானில் இருந்து டெல்லி வந்தடைந்த பாரதப் பிரஜைகள், நன்றிகள் கலந்த உணர்ச்சிப் பெருக்குடன், ‘பாரத் மாதா கி ஜெய்’, இந்திய ராணுவம் ஜிந்தாபாத், பிரதமர் நரேந்திர மோடி ஜிந்தாபாத்’ என்ற கோஷங்களை எழுப்பினர். சூடானில் இருந்து திரும்பிய ஒருவர், மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி, மத்திய அரசு எங்களை மிகவும் ஆதரித்தது. அங்குள்ள சூழல் மிகவும் ஆபத்தானது என்பதால் நாங்கள் பாதுகாப்பாக இங்கு வந்தடைந்தது மிகப்பெரிய விஷயம். பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு நன்றி” என்று கூறினார். இதேபோல, ராணுவத்தின் இரண்டாவது சி 130 ஜே விமானமும் சூடானில் இருந்து 135 பயணிகளுடன் சௌதியின் ஜெட்டாவிற்கும் அங்கிருந்து பாரதத்துக்கும் புறப்பட்டது.