பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 27 அன்று மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து ஐந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ராணி கமலாபதி – ஜபல்பூர், கஜுராஹோ – -போபால்,- இந்தூர் – மட்கான் (கோவா), – மும்பை – தார்வாட், பெங்களூரு – ஹதியா பாட்னா ஆகிய ஐந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவிற்கு முன்னதாக, ராணி கம்லாபதி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலில் பயணித்த ரயிலின் பயணியாளர்கள், குழந்தைகளுடன் பிரதமர் உரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஆளுநர் மங்குபாய் சி படேல், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷா, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.