பிரதமர் மோடியே தலைவர்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாரத வம்சாவளியினர் முன் உரையாற்றிய பிரதமர் மோடி, “2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு நான் வந்தபோது, உங்களுக்கு நான் ஒரு வாக்குறுதி வழங்கினேன். பாரதப் பிரதமர் ஒருவருக்காக நீங்கள் 28 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இருக்காது என கூறினேன். அதனால், சிட்னி நகரில் நான் மீண்டும் வந்துள்ளேன். இதற்கு முன்பு, பாரதம் மற்றும் ஆஸ்திரேலியாவின் உறவுகள் 3 ‘சி’ (C) க்களை கொண்டு வரையறுக்கப்பட்டன. அவை காமன்வெல்த், கிரிக்கெட் மற்றும் கறி ஆகியவை ஆகும். அதன்பின்பு, நமது உறவு மூன்று ‘டி’ (D) க்களை கொண்டு வரையறுக்கப்பட்டது. அவை, ஜனநாயகம், வம்சாவளியினர் மற்றும் நட்பு ஆகியவை ஆகும். சிலர் நமது உறவுகள், எரிசக்தி, பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றை சார்ந்து உள்ளது. ஆனால், பாரதம் ஆஸ்திரேலியா இடையேயான உறவானது அதற்கும் அப்பாற்பட்டது என நான் நம்புகிறேன். அது பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையிலானது. விளையாட்டு, உணவு, மசாலாக்கள் என பல அம்சங்கள் பாரதம் ஆஸ்திரேலியாவை இணைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி என பல தரப்பு பாரத மக்கள் ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றனர்” என கூறினார். முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி பேசுகையில், கடந்த முறை இதே மேடையில் கடைசியாக காணப்பட்டவர் அமெரிக்க பாடகர் புரூஸ் ஸிபிரிங்ஸ்டீன். பிரதமர் மோடிக்கு கிடைத்த அளவுக்கு அப்போது அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. பிரதமர் மோடியே தலைவர் என பேசினார்.