பிரதமர் கிசான் சம்மன்

‘கரிப் கல்யாண் சம்மேளனில்’ பங்கேற்பதற்காக ஹிமாச்சல பிரதேசம், சிம்லா சென்றடைந்தந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அரசின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் எட்டாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.  நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரதிநிதிகளிடம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கருத்து கேட்டறிந்தார். அதன் ஒரு பகுதியாக, பிரதமர் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான விவசாய பயனாளிகளுக்கு 21,000 கோடி ரூபாயை வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசின் சார்பில், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 என 3 தவணையாக ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரை 10 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வகையில் நேற்று 11வது தவணையாக ரூ. 2,000 நிதி வழங்கப்பட்டது.