லிஸ் ட்ரஸூக்கு பிரதமர் வாழ்த்து

இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் ட்ரஸூக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமரின் டுவிட்டர் பதிவில்; “இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் ட்ரஸூக்கு வாழ்த்துக்கள். தங்களுடைய தலைமையின் கீழ், பாரதம் இங்கிலாந்து இடையேயான நட்புறவு மேலும் வலுபெறும் என்று நம்புகிறேன். உங்களுடைய புதிய பணி மற்றும் பொறுப்புகளை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.