கேரளாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விழிஞ்சத்தில் அதானி துறைமுகத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது. விழிஞ்சம் காவல் நிலையம் மீதும் அந்த வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியது. லத்தீன் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையிலான வன்முறையாளர்கள், ஆர்பாட்டம் என்ற பெயரில் காவல்துறையினரின் வாகனங்களை தாக்கி சேதப்படுத்தினர். காவல் நிலையத்தின் மீது தடிகள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தினர். 29 காவல் அதிகாரிகளை தாக்கி காயப்படுத்தினர். இதனையடுத்து இந்த வன்முறை சம்பந்தமாக கிறிஸ்தவ பாதிரிகளான தாமஸ் ஜே. நெட்டோ, கிறிஸ்துதாஸ், இயூஜின் பெரேரா, லாரன்ஸ் குலாஸ் உள்ளிட்ட 15 பாதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு காவலர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதையடுத்து அவர்கள் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த நவம்பர் 26 அன்று இவர்கள் நடத்திய வன்முறைப் போராட்டங்கள் தொடர்பாக ஒரு சிலர் கைது செய்யப்பட்ட பின்னர் அதற்கு பழி தீர்க்கும் விதமாக இந்த வன்முறை நடைபெற்றதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.