விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டியை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் ஜோசப் ராஜா, கடந்த 2022-ம் ஆண்டு சர்ச்சில் பிராத்தனை முடிந்த பின் தனியாக இருந்த மனநலம் குன்றிய 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதுகுறித்து சிறுமியின் சிறுமியின் தாயார் அளித்த புகார் அடிப்படையில், ராஜபாளையம் மகளிர் காவல்துறையினர் பாதிரியை போக்சோவில் கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம், ஜோசப் ராஜாவிற்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ஒரு லட்சமும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.