மதமாற்றம் தடுத்து நிறுத்தம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகிலுள்ள ததுவானா கிராமத்தில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை நிகழ்ச்சி என்ற பெயரில் கட்டாய மதமாற்றம் செய்தனர். இதனை அறிந்த நிஹாங் சீக்கியர்கள் அங்கு சென்று  நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் செய்தனர். அந்த கிராமத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் இனி நடைபெறாது என காவல்துறை உறுதியளித்ததைத் தொடர்ந்து கலைந்து சென்றனர். கடந்த சில மாதங்களாக பிரார்த்தனை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து மதமாற்றம் செய்து வருகின்றனர். இந்த மதமாற்றத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் அரசு நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நிஹாங்குகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், மாநில அரசு மதமாற்றத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாபில் உள்ள அனைத்து சீக்கிய மத குழுக்களும் ஒன்றிணைந்து இதுபோன்ற மதமாற்றங்களுக்கு எதிராக போராட வேண்டும். நமது மாநிலத்தையும் மதத்தையும் காப்பாற்ற நாம் அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என கூறினர்.