பிரஷர் குக்கர் குண்டுகள்

ஜார்க்கண்டில் உள்ள சரகலா கர்சவான் பகுதி காவல்துறையினரால் 15 பிரஷர் குக்கர் குண்டுகள் மீட்கப்பட்டன. அப்பகுதியில் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, சி.ஆர்.பி.எப்பின் 157வது பட்டாலியன் வீரர்கள், காவல்துறை மற்றும் பி.டி.டி.எஸ் குழுவினர் கடரங்கா வனப்பகுதிக்கு அருகே தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு 15 பிரஷர் குக்கர் குண்டுகள் கைப்பற்றப்பட்டன. பாதுகாப்புப் படைகள் மாவோயிஸ்ட்டுகளின் மறைவிடங்களில் நுழைவதைத் தடுக்கவே இவற்றை பயங்கரவாதிகள் பொருத்தி இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. பி.டி.டி.எஸ் குழு அவற்றை பாதுகாப்பாக அழித்தது. இதேபோல சில நாட்களுக்கு முன்பு பத்ராதி மற்றும் டோடர்தா அருகே நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் ஏராளமான ஐ.இ.டி வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன.