மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் துணை தேவதை மண்ணில் புதைந்திருப்பது தேவபிரசன்னம் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டது. பெண்களின் சபரிமலை என்று புகழப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஜோதிடர் ஸ்ரீநாத், விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் தேவபிரசன்னம் பார்க்க, தீ விபத்திற்கு அம்மனின் கோபமே காரணம் என்றும் அதற்கான பரிகாரங்களும் கூறப்பட்டன. மேலும், கோயிலில் தேவியுடன் ஒரு யக்ஷி – துணை தேவதை தெரிவதாகவும், அதற்கும் சன்னதி அமைத்து பூஜை நடத்த வேண்டும் என்றும் தெரியவந்தது. அவ்வாறு இல்லை என தேவசம்போர்டு அதிகாரிகள் மறுத்தனர். அந்த சிலை இருக்கும் இடத்தை பிரசன்னம் பார்த்தவர்கள் கூற, அங்கு மண்ணுக்குள் தோண்டியபோது சிலை கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து, சன்னதி அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.