மைசூர் அரண்மனை தசரா கொண்டாட்டங்களுக்கு மிகவும் பிரபலமானது. இது உடையார் மகாராஜாக்களின் இருப்பிடமாக உள்ளது. இந்த அரண்மனை வளாகத்தில், 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் முதற்கொண்டு 12 ஹிந்துக் கோயில்கள் உள்ளன. இந்த அம்பா விலாஸ் அரண்மனையில் முஸ்லிம் ஆண்கள் 10 பேர் தொழுகை நடத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இவர்கள் குஜராத்தில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அறிய மைசூரு அரண்மனை துணை இயக்குனரை அணுகியபோது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக ‘நியூஸ் கர்நாடகா’ கூறியுள்ளது. பி.எப்.ஐ, சி.எப்.ஐ உள்ளிட்ட முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவுடன், அரசுப் பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் முஸ்லிம்கள் வேண்டுமென்றே தொழுகை செய்ய வைக்கப்படுகின்றனர். இது ஆத்திரமூட்டும், சமூக பகையை வளர்க்கும் திட்டமிட்ட முயற்சியைத்தவிர வேறொன்றும் இல்லை. மத்திய வக்ஃப் கவுன்சில் உறுப்பினர் ரைஸ் பதான், ‘எந்த பொது இடத்தையும் நமாஸ் செய்ய பயன்படுத்தக்கூடாது’ என முன்பு சுட்டிக்காட்டி இருந்தார் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.