உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தனது டுவிட்டர் பதிவில், ‘கொரோனா காரணமாக மரணங்கள் ஏற்படுவதை ஒப்பிடும்போது, தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம், இளைஞர்கள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. நான் தடுப்பூசிக்கு எதிரானவன் அல்ல, ஆனால், உலகளாவிய தடுப்பூசி ஊக்குவிப்பை நான் எதிர்க்கிறேன். நான் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன்’ என தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன. முன்னதாக, அமெரிக்க எழுத்தாளர் நவோமி உல்ப் என்பவர், தடுப்பூசிகளைப் பற்றி தவறான தகவல்களை பரப்பியதால் அவரது கணக்கை டுவிட்டர் நிறுவனம் நிறுத்தியது. அதேபோல, டுவிட்டர் பிரசாந்த் பூஷன் விஷயத்தில் நடந்துகொள்ளும்மா என பொறுத்திருந்து பார்ப்போம்.