குவாட் தடுப்பூசி முன்முயற்சியின் கீழ் கம்போடியா, தாய்லாந்த் உள்ளிட்ட நடுகளுக்கு பாரதம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது. மேலும், பாரதத்தின் அண்டை நாடுகளான வங்க தேசம், நேபாளம், இலங்கை உட்பட பல நாடுகளுக்கும் ஐ.நா பாதுகாப்புப் படையினருக்கும் பாரதம் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியது. பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்தது. இதனால் பல நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து விடுதலை பெற்றன. இந்த மனிதாபிமான நடவடிக்கைக்கு குவாட் நாடுகளின் மற்ற தலைவர்களான ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் பிரதமர் மோடிக்கும் பாரத்த்துக்கும் பாராட்டுகளை தெரிவித்தனர்.