மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பி.ஹெச்.இ.எல்) நிறுவனம், இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் அமைந்துள்ள பைரா சியுல் நீர் மின் நிலையத்தின் 60 மெகாவாட் திறனுடைய மூன்றாவது மற்றும் இறுதி அலகை புதுப்பித்து நவீனமயமாக்கி உள்ளது. இந்த மின் நிலையத்தின் முதல் மற்றும் இரண்டாவது அலகுகள் முறையே கடந்த டிசம்பர் 2019 மற்றும் அக்டோபர் 2020ல் புதுப்பிக்கப்பட்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. 1981ல் நிறுவப்பட்ட, இந்த பைரா சியுல் நீர் மின் நிலையம், என்.ஹெச்.பி.சி லிமிடெட்டின் முதல் நீர் மின் நிலையம். அப்போது இதற்கென உபகரணங்களை தயாரித்து வழங்கியதும் இதே பி.ஹெச்.இ.எல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பி.ஹெச்.இ.எல், தற்போது நாடு முழுவதும் உள்ள 149 நீர் மின் நிலையங்களை மீண்டும் புதுப்பித்து நவீனமயமாக்கி வருகிறது. இதன்மூலம் நீர் மின்சாரம் 639 மெகாவாட்டாக உயரும்.