பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட ஆந்திர அரசு தடை விதித்துள்ளது. ஆந்திர அரசின் இந்த முடிவுக்கு பா.ஜ.க, ஹிந்து அமைப்புகள், பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘ஹிந்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் முதலில் கொண்டாடும் பண்டிகை விநாயகர் சதுர்த்தி. விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய பின்னர் மட்டுமே மற்ற பண்டிகைகளை கொண்டாடுவது ஹிந்துக்களின் வழக்கம். ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்தநாள், அவருடைய தந்தை ராஜசேகர் ரெட்டியின் நினைவுநாள் ஆகியவற்றின் போது பல்லாயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் கூடி நிகழ்ச்சிகளை நடத்தினர். ஆனால், அப்போது பரவாத கொரோனா, விநாயகர் சதுர்த்தி நடத்தினால் மட்டும் பரவுமா, விநாயகர் சதுர்த்தி தடை விதித்து அரசு எடுத்துள்ள முடிவு இவர்களுக்கு ஆலோசனை கூறுவது யார்? என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது’ என தெரிவித்துள்ளார்.