தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும், ‘பாஸ்டேக்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.பாஸ்டேக் மின்னணு அட்டைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் www.ihmcl.co.in என்ற இணையதளம் வாயிலாகவும், ‘my Fastag’ என்ற அலைபேசி செயலி வாயிலாகவும் வழங்கி வருகிறது.இதனை எளிமைபடுத்த பல்வேறு வங்கிகள், தொலைதொடர்பு நிறுவனங்கள், பண வங்கிகள் வாயிலாகவும் பாஸ்டேக் அட்டைகள் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தற்போது ‘ஆன்லைன்’ வாயிலாக, பாஸ்டேக் அட்டைகள் வழங்கப்படுவதாக, பல போலி விளம்பரங்கள் வருகின்றன.இதை நம்பி ஆன்லைன் வாயிலாக, யாரும் பணம் கட்டி ஏமாற வேண்டாம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரித்துள்ளது.இது போன்ற முறைகேடுகள் நடப்பதாகத் தெரிந்தால் அந்த விபரங்களை ‘1033’ என்ற, அவசர கட்டுப்பாட்டு அறைக்கு அல்லது etc.nodal@ihmcl.com.என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்க கோரப்பட்டுள்ளது.