கொரோனாவுக்கு பிறகான சிகிச்சை இலவசம்

உத்தர பிரதேசத்தில், கோவிட் -19 நோயாளிகளுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். பல கொரோனா நோயாளிகள் கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் அதற்குப் பிந்தைய சிகிச்சைக்காகவும் கொரோனா இல்லை என ஆர்டி-பி.சி.ஆர் சான்று கிடைக்கும் வரையிலும் மருத்துவமனைகளில் தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பொதுவான வார்டுகளில் தங்கியிருக்கும் அத்தகையோருக்கு இந்த உத்தரவு ஆறுதல் அளித்துள்ளது. உத்தரபிரதேச மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை இலவசம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.