பூஞ்ச் என்கவுன்டர்

காஷ்மீரின் பூஞ்ச் செக்டாரில் உள்ள ரஜோரி காடுகளில் பயங்கரவாதிகளை தேடி அழிக்க நடைபெற்று வரும் என்கவுன்டர் 2009க்கு பிறகு ராணுவத்தின் மிகப்பெரிய ஆபரேஷனாக மாறியுள்ளது. 2009ல் இதே பூஞ்ச் செக்டாரில் ஜனவரி 1 முதல் 9ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் நடைபெற்ற தேடுதல் ஆபரேஷனில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தற்போது நடைபெற்று வரும் ஆபரேஷன் இன்றுடன் 11வது நாளை எட்டியுள்ளது. இதுவரை 2 அதிகாரிகள் உட்பட 9 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர், 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எஞ்சியுள்ள பயங்கரவாதிகளை பாரா சிறப்பு படையினர், ஆளில்லா விமானங்கள் உட்பட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தேடி வருகின்றனர்.