சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த செல்வம் என்பவர் இயக்குனர் மணிரத்னம், நடிகர் விக்ரம், படத்தின் தயாரிப்பாளர் சு பாஸ்கரன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில், சோழ வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லாத நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் நெற்றியில் நாமம் இட்டுள்ளது போன்ற காட்சி அமைப்பு தவறானது. இயக்குனர் மணிரத்னம் சோழர் வரலாற்றை மறைத்துள்ளார். இதுபோல படத்தில் இன்னும் எத்தனை வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது என்பதை படம் பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் படத்தை வெளியிடும் முன் அதனை எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும். எங்களுக்கு திரையிட்டு காட்டாமல் படத்தை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொன்னியின் செல்வன் படத்தில் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதா என்பது எங்களுக்கு தெரிய வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.