பத்திரிக்கையாளர்களைஒருமையில் பேசிய பொன்முடி

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் உள்ள மேலமங்கலம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்க சென்றார் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி. அவரை, அப்பகுதியை சேர்ந்த செய்தியாளர்கள் ஒன்று சேர்ந்து சந்தித்து, முதல்வர் ஸ்டாலின் அறிவித்த செய்தியாளர்களுக்கான ரூ 5 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகையை, தாலுக்கா பத்திரிகையாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.அப்போது மனுவை கையில் வாங்காமல் செய்தியாளர்களை பார்த்து “யோவ் உங்களால்தான் கொரோனா பரவுகிறது, கிராமத்தில் வசிக்கும் செய்தியாளர்களுக்கு பணம் கொடுப்பார்களா?தளபதி சொன்னது மாவட்ட செய்தியாளர்களுக்கு மட்டும்தான் போ” என்று ஒருமையில் பேசினார்.அமைச்சரின் இந்த அநாகரீகப் பேச்சால் அங்கிருந்த அனைவரும் திகைத்தனர். முதலமைச்சராக பதவி ஏற்றதும் பத்திரிக்கையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்த ஸ்டாலின் தற்போது இப்படி பேசியுள்ள அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் பொன்முடி.