திருலை தேவஸ்தானத்தில் அரசியல்

ஆந்திர மாநில அரசு, சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 24 அறங்காவலர்கள், 52 சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் 4 அதிகாரப்பூர்வ உறுப்பினர்களை நியமித்துள்ளது. இது குறித்து திருமலை திருப்பதி சன்ரக்ஷன் சமிதி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருமலை திருப்பதி அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளர்களைச் சேர்ப்பதன் மூலம் திருமலை திருப்பதி கோயிலை அரசியலில் வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்புபை வழங்கும் மையமாக ஆந்திர அரசு மாற்றிவிட்டது.

திருமலை தேவஸ்தானம் என்பது, ஆன்மிக அன்பர்கள், துறவிகள், பக்தர்களுக்கான ஒரு ஹிந்து அன்மிக கேந்திரமாகவும் தர்ம பிரச்சாரத்தின் மையமாகவும் திகழ வேண்டும். தர்ம ஆச்சார்யர்களின் வழிகாட்டுதலின்படி தர்ம விதிகளுக்கு உட்பட்டு பக்தர்களுக்கும் கடவுளுக்கும் தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். ஆனால், ஆளும் கட்சியால் அரசாங்க பதவிகள் கொடுக்க முடியாதவர்களுக்கு தேவஸ்தான வாரிய உறுப்பினர்கள் பதவியை வழங்கி அவர்களை திருப்திப்படுத்தி வருகிறது. அரசு நியமனங்களில் ஆச்சார்யர்கள், பக்தர்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பு இல்லை.

தற்போதுள்ள பல உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பல முறை தரிசனம் செய்யலாம், நண்பர்கள், உறவினர்களுக்கு வி.ஐ.பி தரிசன வாய்ப்பளிக்கலாம் என கருதுகின்றனர். இது கோயில் ஊழியர்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக இருக்கும். இந்த உறுப்பினர்களில் எத்தனை பேர் உண்மையாகவே கோயிலின் தினசரி நடவடிக்கைகளை ஒழுங்காக நடத்த உதவுவார்கள், கோயில் நிர்வாகத்தில் எத்தனை அறங்காவலர்கள் நிபுணர்கள், அவர்களால் கோயிலுக்கு என்ன பயன்? தேவஸ்தான அறக்கட்டளையின் நிதி தேவஸ்தான பணிகள் அல்லாத நடவடிக்கைகளுக்கு திருப்பி விடப்படுகிறது. தேவஸ்தானம் தற்போது ஒரு மினி மாநில அரசாங்கமாக மாறிவிட்டது.

கோயில்களின் நிர்வாகப் பொறுப்பை மாநில அரசிடமிருந்து அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது அறநிலையத்துறையை துறையை ஒழிக்க வேண்டிய நேரமும் இதுதான்’ என கூறியுள்ளது.