காவல்துறையினர் கண்காணிப்பு தீவிரம்

கோவையில் கடந்த மாதம் 23ம் தேதி முஸ்லிம் பயங்கரவாதி ஜமேஷா முபின் கார் குண்டுவெடிப்பு முயற்சி நடத்திய நிலையில், அண்டை மாநிலமான கர்நாடகாவின் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்துள்ளதால் தமிழகம் முழுவதும் காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநில எல்லைகளில் கூடுதல் சோதனை சாவடிகளை அமைத்து விடிய விடிய வாகன தணிக்கைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில், மாநில எல்லைகள், கடலோர பகுதிகள், சுற்றுலா தளங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், திரையரங்குகள், கோயில்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர். சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் அளிக்குமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.