பி.எம்.எஸ் ஆர்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்களுக்கான முதலீடு, சொத்து பணமாக்குதல் திட்டங்கள் உள்ளிட்ட அரசின் கொள்கைகளுக்கு எதிராக பாரதிய மஸ்தூர் சங்கம் அக்டோபர் 28 அன்று ‘பொதுத் துறைகளைக் காப்பாற்றுங்கள், தேசத்தைக் காப்பாற்றுங்கள்’ என்ற கோரிக்கையுடன் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது. இந்த ஆர்பாட்டத்தில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் முதலீட்டு விலக்கலை நிறுத்துதல், அந்நிய நேரடி முதலீட்டுக்கு வரம்புகளை நிர்ணயித்தல், வங்கிகள், காப்பீடு உள்ளிட்ட பிற பொதுத்துறை நிறுவனங்களின் இணைப்புகளை நிறுத்துதல், நிலக்கரி துறையை வணிகமயமாக்குவதை நிறுத்துதல், முன்மொழியப்பட்ட தொழில்துறை உறவுகள் குறியீட்டில் தொழிலாளர்களுக்கு எதிரான மாற்றங்களை நிறுத்துதல், பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் ஆகியவற்றுக்கான புத்துயிர் தொகுப்பு, இவற்றை போன்றே மீதமுள்ள பொதுத் துறைகளில் 3வது ஊதியத் திருத்தக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட ஓய்வூதியம், நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களின் மறுமலர்ச்சி உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்படும். எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் பி.எம்.எஸ் அரசுக்கு எதிரான எதிர்கால நடவடிக்கை குறித்து ஆராய்ந்து முடிவு செய்யும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.