முதுமலையில் பிரதமர் மோடி

தெலுங்கானா, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 2 நாட்கள் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கானா மற்றும் தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு நேற்று முன்தினம் வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் துவக்கம், மீனம்பாக்கம் விமானநிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட ஏராளமான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களை துவக்கி வைப்பது, ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பங்கேற்பது என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனையடுத்து நேற்று, புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50வது ஆண்டு பொன் விழா, நாடு முழுவதிலும் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கொண்டாடப்படுவதையொட்டி, பிரதமர் மோடி நேற்று பந்திப்பூர், முதுமலை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றார். பந்திபூர் புலிகள் காப்பகத்தில் இருந்து வாகனம் மூலம் முதுமலை சென்ற பிரதமர், முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமுக்கு சென்றார். அவரை வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித், உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், ஆஸ்கர் விருது பெற்ற யானைகள் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து பாராட்டினார். மேலும், டி 23 புலியை உயிருடன் பிடித்த வேட்டை தடுப்புல் காவலர் பன்டனையும் பாராட்டினார். பின்னர் தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகளுக்கு கரும்புகளை கொடுத்து மகிழ்ந்தார். பின்னர், புலிகள் காப்பக திட்டம் குறித்து வனத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடிர். அங்கிருந்து சாலை மார்க்கமாக மசினகுடி சென்ற பிரதமர், அங்கு அவரை காண ஏராலமான பொதுமக்கள் மற்றும் பா.ஜ.கவினர் ஆர்வத்துடன் காத்திருந்ததை கண்டு வாகனத்தில் இருந்து இறங்கி அவர்களுக்கு கை அசைத்து வணக்கம் தெரிவித்து காரில் புறப்பட்டு ஹெலிபேடுக்குச் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மைசூர் புறப்பட்டுச் சென்றார்.மைசூரு சென்றார். அங்கு பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் பொன்விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் 2022ம் ஆண்டு நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு எண்ணிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார். நாடு முழுவதும் மொத்தம் 3,167 புலிகள் உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.