பொதுமக்கள், irctcconnect.apk எனப்படும் சந்தேகத்திற்கிடமான ஆண்ட்ராய்டு அலைபேசி செயலியை தங்கள் அலைபேசிகளில் நிறுவ வேண்டாம். அதில் இருந்து விலகி இருக்கவும். இந்த செயலி, அவர்களின் மொபைல் சாதனங்களைப் பாதிக்கலாம். யு.பி.ஐ விவரங்கள் மற்றும் வங்கித் தகவல் போன்ற தனிப்பட்ட தகவல்களை அவை திருட வாய்ப்புள்ளது. எனவே, பயனர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி) அதன் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தீங்கிழைக்கும் செயலி ,வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற மெசேஜிங் தளங்களில் பரவி வருவதாக ஐ.ஆர்.சி.டி.சி தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. மேலும், ஐ.ஆர்.சி.டி.சியின் அங்கீகரிக்கப்பட்ட ‘ஐ.ஆர்..சிடி.சி ரயில் கனெக்ட்’ மொபைல் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து மட்டும் எப்போதும் பதிவிறக்கம் செய்யவும். ஐ.ஆர்.சி.டி.சி, தனது பயனர்கள், வாடிக்கையாளர்களை அவர்களின் பின், ஓ.டி.பி, கடவுச்சொல், கிரெடிட், டெபிட் கார்டு விவரங்கள், நெட் பேங்கிங் கடவுச்சொல் அல்லது யு.பி.ஐ விவரங்களுக்காக அழைக்காது என்பதை நினைவில் கொள்ளவும் எனவும் தெரிவித்துள்ளது.