திருப்பதியின் அடிவாரமான அலிபிரி முதல் திருமலை வரை கடந்த ஜூன் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழு தடை அமலுக்கு வந்துள்ளது. கடைகள், உணவகங்கள், தேவஸ்தான அலுவலகங்கள், சோதனைச் சாவடிகள் போன்ற அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு திருப்பதிக்கு வரும் பக்தர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழலை பாதுகாக்க விரைவில் திருப்பதி திருமலை இடையே அரசு சார்பில் 100 பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும். ஏற்கனவே, சுவாமி பிரசாதம் விநியோகிக்கும் பைகளும் சணல் அல்லது பயோ பைகள் மட்டுமே தேவஸ்தானம் பயன்படுத்தப்படுகிறது, சுவாமியின் நைவேத்தியத்துக்கு இயற்கை உரத்தில் பயிரிடப்பட்ட தானியங்கள் உபயோகப்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.