கல்கத்தா உயர் நீதிமன்றம் மேற்கு வங்கத்தில் ஸ்ரீராம நவமியின் போது நடத்தப்பட்ட வன்முறை வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கை நீதிபதி ஹிரண்மய் பட்டாச்சார்யா, தற்காலிக தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட 2 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் சுவேந்து அதிகாரியின் மனு இதில் பரிசீலிக்கப்பட்டது. அப்போது கருத்துத் தெரிவித்த /நீதிபதிகள், “வெளிப்புற ஆபத்து அல்லது ஊடுருவல் போன்றவற்றின் போது இணைய வசதி தற்காலிக நிறுத்தம் நடைபெறுவதை ஒப்புக்கொள்ள முடியும் ஆனால், ஒரு மத ஊர்வலத்திற்காக, ஏன் இணையவசதி இடைநிறுத்தப்பட்டது? என்பது எங்களுக்குப் புரியவில்லை. மாநில அரசின் அறிக்கைகள் வன்முறைகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என்று காட்டுகின்றன. கூரைகளில் இருந்து கற்கள் வீசப்பட்டதாக குற்றச்சாட்டுகள் இதில் உள்ளன. வெளிப்படையாக கூறுவதானால், 10 முதல் 15 நிமிடங்களுக்குள் யாராலும் கூரையின் மேல் கற்களை எடுத்துச் சென்று சேகரித்து வைத்துக்கொண்டு தாக்குதல் நடத்த முடியாது. எனவே இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது. ராம நவமியின் போது நடந்த வன்முறைகள் பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளது” என குறிப்பிட்டனர். இதற்கிடையில், மேற்கு வங்கம் அரசுத்தரப்பு வழக்கறிஞர் எஸ்.என்.முகர்ஜி, ஹிந்து பக்தர்கள் லத்தி மற்றும் வாள்களுடன் ஆயுதங்கள் ஏந்தியதாக குற்றம் சாட்டினார். மேற்கு வங்கத்தில் ஹிந்து மதப் பண்டிகைகளின் போது வன்முறை சம்பவங்கள் நிகழ்த்தப்படுவது சகஜமான விஷயமாகிவிட்டது. அனைத்து மதத்தினரும்… மற்ற சமூகத்தினரும் கூட மத ஊர்வலங்களை நடத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 8 வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று, பின்னர் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன, மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் விசாரணை கோரப்படுகிறது. காவல்துறையினருக்கு இதுகுறித்த விழிப்புணர்வு தேவையா அல்லது அவர்கள் தரப்பில் ஏதேனும் இயலாமை உள்ளதா? என்பதை அறியவும் நீதிமன்றம் முயல்கிறது” என கேள்வி எழுப்பினர்.