நாளுக்கு நாள் அரசின் நலத்திட்டங்களில் தி.மு.க தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறத் துவங்கிவிட்டன. தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிதாக இயக்கப்படும் பேருந்துகளில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் ஒட்டப்பட்டுள்ளது. ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, விளம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம் என்பதை கூறிய தி.மு.க, தற்போது விளம்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது பொதுமக்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.