பி.எப்.ஐ உறுப்பினர் கைது

தேச விரோத நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு நிதி திரட்டியது, பணமோசடி செய்த்து உள்ளிட்ட வழக்கில் அப்துல் ரசாக்  என்ற பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் அமலாக்க இயக்குனரகம் அவரை கைது செய்துள்ளது. பிறகு அவரை உத்தரப் பிரதேசம் லக்னோவில் உள்ள சிறப்பு பணமோசடி தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. நீதிமன்றம் அவரை ஏழு நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பரில் ரசாக் தொடர்புடைய இடங்களில் மத்திய புலனாய்வு அமைப்பு சோதனை செய்தது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது நினைவு கூரத்தக்கது.