ஹத்ராஸ் கற்பழிப்பு வழக்கினை பயன்படுத்தி பயங்கரவாத செயல்களை நடத்த முயற்சித்தன பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ), அதன் மாணவர் பிரிவான கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா (சி.எப்.ஐ) அமைப்புகள். இதனை விசாரித்த அமலாக்கத்துறை அதன் உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டை பதிவு செய்து நீதிமன்ற விசாரணைக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, சி.ஏ.ஏ வன்முறை போராட்டத்தில் பங்கு வகித்தது, பெங்களூரு கலவரம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த அமைப்பின் மீது உள்ளது. சட்டத்திற்கு புறம்பாக ரூ. 100 கோடிக்கும் அதிகமாக நிதி பெற்ற, முறைகேட்டு புகாரும் இவர்கள் மீது உள்ளது. பி.எப்.ஐ, அதன் அரசியல் முகமான எஸ்.டி.பி.ஐ கட்சியின் சில உறுப்பினர்கள், இளைஞர்களுக்கு வெடிபொருள், ஆயுதம் உள்ளிட்ட பயங்கரவாத பயிற்சியளித்தல், சதித்திட்டம் தீட்டுதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.