வீடு கட்டவே அனுமதி தொழுகைக்கு அல்ல

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையே சேர்ந்த அப்துல் அசீஸ், சாதிக் பாட்ஷா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஜமாத் நலனுக்காக கட்டடம் கட்டும்போது, பேரூராட்சி நிர்வாகம் அதற்கு அனுமதி மறுத்துள்ளது என கூறியிருந்தனர். இதற்கு பதில் அளித்த முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம், வீடுகட்ட அனுமதி வாங்கிவிட்டு அங்கு தொழுகை நடத்தும் இடமாக கட்டுமானம் இருந்ததால் திட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. கட்டடம் இடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், வீடு கட்ட அனுமதி பெற்று தொழுகை நடத்தும் இடம் கட்டுவது ஏற்க முடியாதது. அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட அந்த கட்டடம் இடிக்கப்பட வேண்டும். அரசு நிர்வாகம் அக்கட்டுமானத்தை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும், அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என உத்தரவிட்டது.