மக்கள் பிரதிநிதிகளுக்கே தெரியவில்லை

சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை ‘சி 40’ அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் “நெகிழ் திறன், உந்துதலுடன் சென்னை” என்ற தலைப்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 2050ம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலை என்பதை இலக்காக கொண்டு 6 தலைப்புகளில் இந்தச் செயல் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில், கடல் மட்டம் உயர்வால் சென்னை அதிகம் பாதிக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் கடல் மட்டம் 7 செ.மீ உயரும். அடுத்த 100 ஆண்டுகளில் பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், புறநகர் ரயில் நிலையங்கள் கடலில் முழ்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் மூனறாம் முழுமைத் திட்டம் தொடர்பான பயிலரங்கில் இந்த அறிக்கை தொடர்பாக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். செய்தியாளர் சந்திப்புக்கு பிறகு உறுப்பினர் ஒருவர், சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவிடம், இது குறித்து கேட்டார். அதற்கு மேயர் பிரியா, “அவரிடமே வாங்கி கொள்ளுங்கள்” என்று தெரிவித்துவிட்டு வேகமாக சென்று விட்டார். காலநிலை மாற்றம் தொடர்பான திட்ட வரைவு அறிக்கை பொதுமக்கள் கருத்து கேட்க இணையதளத்தில் வெளியிடப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில், மக்கள் பிரநிதிகள் யாருக்கும் இது தொடர்பான தகவல் தெரியவில்லை. சென்னை மாநகராட்சியும் தெரிவிக்கவில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.