மத்தியில் மோடி ஆட்சி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து இது தொடர்பாக ஏ.பி.பி தொலைக்காட்சி, சி-வோட்டர் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது.அதில், ‘நரேந்திர மோடி அல்லாது ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால் கொரோனா பிரச்சனையை யார் சிறப்பாக கையாண்டிருப்பார்கள்’ என்று கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு 66 சதவீதம் பேர் நகரங்களிலும், 62 சதவீதம் பேர் கிராமங்களிலும் மோடி சிறப்பாக கையாண்டார் என்று தெரிவித்துள்ளனர்.அதாவது சராசரியாக 63 சதவீதம் பேர் நரேந்திர மோடி, கொரோனா பிரச்னையை சிறப்பாக கையாண்டார் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.இதற்காக, கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு மக்களிடம் கருத்துக்களை கேட்டது.இப்பொழுது அது குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.இதைத்தவிர, கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் நடத்தப்பட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் சரியா, தவறா?கொரோனா வைரஸ் பரவியபோது மோடி, ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தது சரியாய், தவறா?எனவும் பல கேள்விகள் முன் வைக்கப்பட்டன.