செயற்கையாக மின்சாரத் தட்டுப்பாட்டு ஏற்படுத்தப்பட்டு அதில் லாபம் பார்க்கப்படுவதாக தமிழக அரசின் மேல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வரும் நிலையில், காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பை கிடங்கு வளாகத்தில் கடந்த 8 மாத காலமாக (அதாவது தி.மு.க பதவியேற்றது முதல்) ஜெனரேட்டர் பழுதடைந்துள்ளது. இதனை சீரமைக்க தமிழக அரசு முயற்சி எடுக்கவில்லை. இதனால், உணவு மற்றும் இறைச்சி கழிவுகள் மூலம் தயாரிக்கப்படும் உயிரி எரிவாயு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஜெனரேட்டர் மூலம், கடந்த 2016ம் ஆண்டு முதல் 440 கி.வோ. மின்சாரம் உற்பத்தி செய்து குப்பை கிடங்கு வளாகத்தில் உள்ள 55 மின்விளக்குகள் ஒளிரவைக்கப்பட்டு வந்தன. இதிலும் எதாவது உள்நோக்கம் உள்ளதா என சந்தேகம் தெரிவித்துள்ள மக்கள், ஜெனரேட்டரை சீரமைத்து மின்சார உற்பத்தியை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.