விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், ‘விளையாட்டு வீரர்களின் ஓய்வுக்கு பிறகு, அவர்களின் வாழ்வாதாரத்துக்காக மாத ஓய்வூதியத்தை, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒலிம்பிக், பாராலிம்பிக், காமன்வெல்த், உலககோப்பை போட்டிகளில் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற்று 30 வயதை கடந்த பிறகு, ரூ. 12,000 முதல் ரூ. 20,000 வரை ஒய்வூதியம் வழங்கப்படுகிறது. எல்.ஐ.சி மூலம் இது செயல்படுத்தப்படுகிறது. இதற்காக எல்.ஐ.சிக்கு, விளையாட்டுத்துறை அமைச்சகம் பெரும் தொகையை செலுத்தி வருகிறது. தற்போது 821 வீரர்கள் ஒய்வூதியம் பெற்று வருகின்றனர்’ என தெரிவித்தார்.