கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அபராதம்

கேரள மா நிலத்தில் உள்ள எர்ணாகுளம்- அங்கமாலி மறைமாவட்டத்திற்கு சொந்தமான சிரோ மலபார் தேவாலயம், வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக என கூறி தனது சர்ச் நிலத்தை 58 கோடிகளுக்கு விற்றது. ஆனால், கடனை திருப்பி செலுத்தாமல் அந்த பணத்தில் இரண்டு நிலங்களை வாங்கியுள்ளது. வாங்கிய நிலத்திற்கும் பணத்தை ஒழுங்காக தரவில்லை. நில பரிவர்த்தனை பத்திரங்களிலும் அசல் சந்தை விலையை விட குறைவான தொகையே குறிப்பிடப்பட்டு முரைகேடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அந்த பனமும் பேராயர் கணக்கில் முறையாக வரவு வைக்கப்படவில்லை. எனவே, நிலத்தை மறுவிற்பனை செய்வது, லாபம் ஈட்டுவது மட்டுமே குறிகோளாகக் கொண்டு சர்ச் நிர்வாகம் செயல்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனையடுத்து வருமான வரித்துறை, சிரோ மலபார் தேவாலயத்திற்கு ரூ. 3.5 கோடி அபராதம் விதித்துள்ளது.