வாட்ஸ் ஆப் செயலி தனது பயனர்களின் விவரங்களை அதன் தாய் நிறுவனமான முகநூல் உள்ளிட்ட செயலிகளுடன் பகிர்ந்து கொள்வதாகவும் தனியுரிமை விதிகளை மீறுவதாகவும் உலகம் முழுவதும் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக அயர்லாந்தில் நடத்தப்பட்ட விசாரணையில் வாட்ஸ் ஆப’ நிறுவனத்துக்கு 50 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. இது குறைவான அபராதம் என ஐரோப்பிய ஒழுங்குமுறையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அயர்லாந்து நாட்டின் தகவல் பாதுகாப்பு ஆணையம் அந்த அபராதத் தொகையை 225 மில்லியன் யூரோவாக (சுமார் 1950 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இந்த அபராதம் மிகவும் அதிகம். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என வாட்ஸ் ஆப் கூறியுள்ளது.