தேர்தல் ஆணையத்திடம் பதிவுசெய்து, அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நாடு முழுவதும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். டெல்லி, உ.பி., குஜராத் உட்பட 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடக்கும் இந்த சோதனையில், அரசியல் கட்சிகள், உரிய விதிகளை பின்பற்றாமல், நன்கொடையை பெற்றுக்கொண்டு வரி மோசடியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, சட்ட விதிகளை பின்பற்றாமல் வருமான வரி விலக்கு கோரிய அரசியல் கட்சிகள் மீது கடந்த மே மாதம் நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம், போலியாக நன்கொடை பெற்றது, வரி மோசடியில் ஈடுபட்டது மற்றும் விதிகளை மீறியதற்காக 87 கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.