நாடாளுமன்றக்குழு பரிந்துரை

பா.ஜ.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி சௌத்ரி தலைமையிலான ‘தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2019’க்கான 30 பேர் கொண்ட நாடாளுமன்றக்குழு, தனது அறிக்கையை இரு அவைகளிலும் தாக்கல் செய்தது. அதில், ‘பாரதத்தில் சமூக ஊடக தளங்கள் உள்ளிட்டவைகளின் தரவுகளை சேமித்து, அவற்றை வகைப்படுத்துவது, அதன் மூலம் அணுகலைக் கட்டுப்படுத்துவது கட்டாயம். சமூக ஊடகத் தளங்களை அவர்கள் வழங்கும் உள்ளடக்கத்திற்குப் பொறுப்பேற்கச் செய்வதன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான கடுமையான விதிமுறைகளை வகுக்க வேண்டும். பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவைப் போன்று சட்டப்பூர்வமான ஊடக ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவ வேண்டும். சமூக ஊடக தளங்களுக்கான கட்டுப்பாடுகள், தனிப்பட்ட தரவு அல்லாதவற்றை உள்ளடக்கும் வகையில் வரைவுச் சட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்த வேண்டும். மென்பொருளுடன் தரவுகளையும் சேகரிக்கும் வன்பொருள் உற்பத்தியாளர்களையும் ஒழுங்குபடுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். டிஜிட்டல் மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) சாதனங்களின் சான்றிதழுக்கான ஒரு திட்டமிட்ட நடைமுறையை உருவாக்க வேண்டும். இடைத்தரகர்களாகச் செயல்படாத அனைத்து சமூக ஊடகத் தளங்களும் ‘வெளியீட்டாளர்கள்’ எனக் கருதப்பட வேண்டும் என்றும் அவை வழங்கும் உள்ளடக்கத்திற்கு அவைகளே பொறுப்பேற்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.