‘பாரீஸ் புத்தகத் திருவிழா 2022’, கடந்த ஏப்ரல் 21ல் தொடங்கப்பட்டது. இதில் கௌரவ விருந்தினராக கலந்துகொள்ள பாரதம் அழைக்கப்பட்டுள்ளது. கௌரவ விருந்தினராக பாரதம் கலந்துகொள்வது, நமது பன்முக இலக்கியம் மற்றும் மொழியைக் கொண்டாடும் தளமாக அமையும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதில் பாரதத்தின் அரங்கும் இடம் பெற்றுள்ளது. பாரதத்தின் அரங்கில், 15க்கும் அதிகமான டிஜிட்டல் மற்றும் நேரடி கண்காட்சிகளும், பாரத மொழிகளில் 65 பதிப்பாளர்கள் வெளியிட்டுள்ள 400க்கும் அதிகமான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.