பஞ்சமி நிலம்

வருவாய் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,  ஏழ்மையினாலும், அறியாமையினாலும், பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறினார். இதற்கு பதிலளித்துப் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 296 ஏக்கர் நிலம் பட்டியலின மக்களுக்கு பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது. சிலர் வறுமை காரணமாக விற்றுள்ளனர். இதை ஆராய மாவட்ட கலெக்டர்களிடம் அறிக்கை கேட்டுள்ளோம். பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றார். இதற்கு, இதை அரசாணை வழியாக செய்ய முடியாது. கர்நாடகாவில் உள்ளது போல் சட்டம் இயற்ற வேண்டும் என கூறினார் வானதி சீனிவாசன். ‘அப்படியே பல ஆண்டுகளாக பதில் தெரியாமல் இருக்கும் முரசொலி நிலம் குறித்தும் அதன் மூலப்பத்திரம் குறித்தும் உண்மையை தெரிவித்தால் நன்றாக இருக்கும்’ என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.