பாகிஸ்தானின் பொய்

பாகிஸ்தான் கடற்படையின் ரோந்து விமானம், கடந்த 16ம் தேதி அதன் எல்லையில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்ததாகவும் பிறகு அக்கப்பல் விரட்டி அடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியிட்டது. இதுபோல கடந்த 2016, 2019களில் சில சம்பவங்கள் நடைபெற்றதாகவும் தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கு பதில் அளித்துள்ள பாரதம், முறையான எந்த கடற்படையும் கடலுக்கு மேலே தெரியும்படி நீர்மூழ்கி கப்பல்களை இயக்குவது இல்லை மாறாக அவை மூழ்கிய நிலையில்தான் இயங்கும் என தெரிவித்துள்ளது. அவர்கள் கூறிய அந்தக் கப்பல் கராச்சி துறைமுகத்தில் இருந்து, 278 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கிறது. எனவே, பாகிஸ்தான் கூற்றில் துளியும் உண்மை இல்லை என்று கடல்சார் செயல்பாடுகளின் ஆராய்ச்சி நிபுணர் ஒருவரும் தெரிவித்துள்ளார்.