பயங்கரவாதம் பரப்பும் பாகிஸ்தான்

கடந்த 2020ல், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இஸ்ரேலை “பாகிஸ்தானின் நம்பர் ஒன் எதிரி” என்று பகிரங்கமாக அறிவித்தார். இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான உறவுகள் சீராகி வருவதை குறித்து இம்ரான் கான் குறிப்பிடுகையில், மற்ற நாடுகள் என்ன செய்தாலும், பாலஸ்தீனியர்களுக்கு நியாயமான தீர்வு, உரிமைகள் கிடைக்கும்வரை, பாகிஸ்தான் ஒருபோதும் இஸ்ரேலை அங்கீகரிக்காது’ என தெரிவித்தார். ஒருவேளை பாகிஸ்தான் இஸ்ரேலை ஏற்றுக்கொண்டால், அது காஷ்மீரை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும், ஏனெனில் அதே நிலை அங்கேயும் பொருந்தும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இன்றும்கூட ஒவ்வொரு ஆண்டும், குறைந்தது ஆயிரம் பாகிஸ்தானியர்கள் காசா மற்றும் மேற்குக் கரையின் பிற பகுதிகளுக்குச் சென்று ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத்தில் இணைகிறார்கள். 1947 முதல், பாகிஸ்தான், பாலஸ்தீனியர்களுக்கு நிதியுதவி, ராணுவ உதவியை நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கி வருகிறது. பாகிஸ்தான் தனது ராணுவ வீர்ர்களை இஸ்ரேல் பகுதியில் போரிட மாறுவேடத்தில் பாலஸ்தீனத்திற்கு அனுப்பியதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச உளவுத்துறை தகவல்படி, ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத்தில் சேர்ந்து, இஸ்ரேலுக்கு எதிராகப் போராடுவதற்கு, பல எதிரி நாடுகளின் பாதுகாப்பை சீர்குலைப்பதற்கு ஆயிரக்கணக்கான முன்னாள் வெளிநாட்டு போராளிகளை பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ பயன்படுத்துவதில் ஆர்வமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.