கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து அம்மாநிலத்தில் பிரிவினைவாதிகளின் ஆதிக்கம் தலைதூக்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலத்தில் கடந்த மே10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அம்மாநிலத்தில், இன்னும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கூட அமைக்காத சூழலில், காங்கிரஸ் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், அங்குள்ள முஸ்லிம் பிரிவினைவாதிகளும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் பெலகாவியின் திலகவதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்றும் பல தேசவிரோத கோஷங்களையும் எழுப்பினர். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலானதை அடுத்து இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காவல் நிலயத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அடையாளம் தெரியாத அந்த நபர்கள் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காவல் நிலயத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அடையாளம் தெரியாத அந்த நபர்கள் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த செயலை கடுமையாக கண்டித்த பா.ஜ.க ஐ.டி பிரிவு தலைவர் அமித் மாளவியா, “பெலகாவியில் ஆத்திரமூட்டும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கத் தயாராகி வருவதால் காவல் துறையினர் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு உள்ளனர். பட்கல் முதல் பெலகாவி வரை இதுதான் அரசியல். திருப்திப்படுத்தும் இந்த அரசியல் நடவடிக்கைகள் கர்நாடகாவின் சமூகக் கட்டமைப்பைக் கிழித்துவிடும்” என தெரிவித்துள்ளார்.