சந்தேக நபர்களை விடுவித்த பாகிஸ்தான்

பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14 அன்று, லாகூரில் உள்ள மினார் இ பாகிஸ்தானில் படம் எடுக்க வந்த பிரபலமான ஒரு யூடியூபர் பெண்ணை 400க்கும் அதிகமானோர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். சமூக ஊடகங்களில் இந்த வீடியோ பரவியது. உலக அளவில் இதற்கு பலத்த கண்டனம் எழுந்தது. இதனையடுத்து 161 பேரை பாகிஸ்தான் காவல்துறை கைது செய்தது. தற்போது, அதில் பலரை அந்த பெண்ணும் அவரின் நண்பர்களும் சரியாக அடையாளம் காட்டவில்லை என கூறி 155 சந்தேக நபர்களை பாகிஸ்தான் காவல்துறை விடுதலை செய்துள்ளது. அடையாளம் காணப்பட்டதாகக் கூறி வெறும் 6 நபர்கள் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்த்து. அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சில நபர்கள், அந்த பெண்தான் தன்னை அப்படி வீடியோ எடுக்க மினார் இ பாகிஸ்தானுக்கு அழைத்ததாக நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.