ரயிலை கவிழ்க்க பாகிஸ்தான் சதி

ராஜஸ்தானில் உதய்பூர் மற்றும் ஆமதாபாத் இடையே அமைக்கப்பட்ட புதிய ரயில் பாதையில், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஜோவார் மற்றும் கர்வா சந்தா ரெயில் பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனால், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. 14 நாட்களுக்கு முன்பு தான் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது இந்த ரயில் பாதை. பொதுமக்கள் ரயில் நிலையத்துக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்ததால் இந்த பாதையில் வந்துகொண்டிருந்த ரயில் நிறுத்தப்பட்டு பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இந்த பாலத்தை சில மர்ம நபர்கள் தகர்க்க முயன்றதாக சந்தேகிக்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்புப்படையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள், பயங்கரவாதம் தடுப்புப்படையினர் (ஏ.டி.எஸ்), என்.ஐ.ஏ உள்ளிட்ட அமைப்புகள் இதில் விசாரணை நடத்தி வருகின்றன. முதற்கட்ட விசாரணையில், இந்த குண்டு வெடிப்பிற்கு டெட்டனேட்டர் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும் சில வெடி பொருட்களை கைப்பற்றப்பட்டுள்ளது. மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சதித் திட்டத்துக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.