காங்கிரசை வழிமொழியும் பாகிஸ்தான்

முஸ்லிம் பயங்கரவாதிகளால் காஷ்மீரி பண்டிட்டுகள் அனுபவித்த இனப்படுகொலையை விவரிக்கும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு கிடைத்துவரும் அபரிமிதமான பாராட்டுகள் இங்குள்ள காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டுமில்லாது பாகிஸ்தானில் உள்ள பல பயங்கரவாத முஸ்லிம்களுக்கும் ஆத்திரத்தை கிளறியுள்ளது. அதற்கு உதாரணமானாக பாகிஸ்தானின் யூடியூப் சேனலான ஹக்கீகத் டிவி, ‘இந்த திரைப்படம் கபடத்தனமானது, உண்மைகள் சிறிதும் இல்லாத முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரப் படம். காஷ்மீர் நடந்த காஷ்மீரி ஹிந்து இனப்படுகொலையை நடத்தியதே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான். அவர்கள் காஷ்மீரில் தங்கள் சொந்த மக்களையே கொன்றுவிட்டார்கள். அந்த பழியை முஸ்லிம்களின் மீது போட்டுவிட்டனர். காஷ்மீரி பண்டிட்டுகள் முதலில் காஷ்மீரைச் சேர்ந்தவர்களே அல்ல. சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ நடைமுறையில் இருந்தாலும் வெளியில் இருந்து வந்து வலுக்கட்டாயமாக அவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் குடியேறினர்’ என்று ஆதாரமில்லாத பொய்களை கூறி கடுமையாக விமர்சித்துள்ளது.  சீனாவுடனான எல்லை விவகாரம், பதான்கோட் தாக்குதல், உரி தாக்குதல் போன்ற பல்வேறு விவகாரங்களில் காங்கிரசின் நிலைப்பாடும் பாகிஸ்தானின் நிலைப்பாடும் ஒன்றாகவே இருந்தது நினைவு கூரத்தக்கது.