பஞ்சாப் மாநிலத்தில், ஆம் ஆத்மி ஆட்சியில் நாளுக்கு நாள் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக பஞ்சாப் மக்களும் பல வணிக உரிமையாளர்களும் சில காலமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நன்றாக குடித்துவிட்டு ஆட்சியை நடத்துவதாக அந்த மாநில எம்.பி சமீபத்தில் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த சூழலில், 50 பஞ்சாபி தொழிலதிபர்கள் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சமீபத்தில் சந்தித்து, அந்த மாநிலத்தில் பில்லியன் கணக்கான ரூபாய் முதலீடு செய்யும் தங்கள் திட்டங்கள் குறித்து விவாதித்தனர். சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், மார்ச் 31, 2023 வரை, தொழிலதிபர்கள் ரூ.5 லட்சம் கோடிக்கான முதலீட்டு பாதுகாப்பு நோக்கத்தையும் அவர்கள் நிர்ணயித்துள்ளனர். உ.பி முதல்வரைச் சந்திக்கச் சென்றவர்களில் ஹீரோ குழும நிறுவனங்களின் தலைவர் பங்கஜ் முன்ஜால், ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிப்பாளரான எஸ்.பி.சைனி, நஹர் குரூப் ஆப் இண்டஸ்ட்ரீசின் சத்ருகன் திவாரி உள்ளிட்ட முக்கிய தொழிலதிபர்களும் அடங்குவர். அடல் பூர்வாஞ்சல் உத்யோகிக் விகாஸ் பரிஷத் என்ற பதாகையின் கீழ் தொழில்முனைவோர் உ.பி முதல்வரை சந்தித்தனர்.லூதியானாவைச் சேர்ந்த தொழிலதிபரும், பஞ்சாப் டையிங் பெடரேஷன் தலைவருமான டி.ஆர் மிஸ்ரா இந்த அமைப்பின் தலைவராக உள்ளார். பஞ்சாபில் முதலீடு செய்ய தொழிலதிபர்களை ஈர்ப்பதற்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஹைதராபாத் மற்றும் சென்னைக்கு விஜயம் செய்து வரும் நேரத்தில் உ.பி முதல்வருடனான பஞ்சாபி தொழிலதிபர்களின் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த பாட்டியாலாவைச் சேர்ந்த முன்னாள் எம்பி தரம்வீர் காந்தி, இது துரதிர்ஷ்டவசமானது.சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளால் மாநிலத்தின் தற்போதைய பொருளாதாரம் சிதைந்து வருவதால், பஞ்சாப் முதலீடுகள் மாநிலத்தை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளன.வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் விரக்தியடைந்துள்ளனர்.ரௌடிகள், தாதாகள் கலாச்சாரம் அதிகரித்துள்ளது.ஆனால், பஞ்சாப் முதல்வர் தென் மாநிலங்களில் இருந்து முதலீட்டைக் கோருவதற்காக பயணம் செய்கிறார்” என்று கூறினார்.