சிரோமணி அகாலி தளம் (எஸ்.ஏ.டி) கட்சியை சேர்ந்த எம்.பி’யான ஹர்சிம்ரத் கவுர் பாதல், நாடாளுமன்றத்தில் பேசுகையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மீது வசைபாடினார்.எங்கள் முதல்வர் நன்றாக குடித்துவிட்டு மாநிலத்தை நடத்துகிறார்.சில மாதங்களுக்கு முன்பு, காலை 11 மணிக்கே குடித்து விட்டு வந்து மக்களவையில் ஓரமாக உட்கார்ந்திருக்கிறார்.அவருக்கு, அருகே இருந்த எம்.பிக்கள், தங்களை வேறு இருக்கைக்கு மாற்றுமாறு கோரினர்.பொதுவாக குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்று எச்சரிப்பார்கள்.ஆனால், ஒருவர் குடித்து விட்டு, மாநிலத்தையே ஓட்டிக் கொண்டிருக்கிறார்.முதல்வரின் நிலையே இப்படி என்றால் மாநிலத்தின் நிலைமையை யோசித்துப் பாருங்கள் என்று குற்றம் சாட்டினார்.இதைகேட்டு மத்திய அமைச்சர் அமித் ஷாவும் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவும் புன்னகைத்தனர்.அவர்கள் மட்டுமல்ல, மொத்த நாடளுமன்றமுமே இதை கேட்டு சிரிப்பாய் சிரித்தது.முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு, ஜெர்மனியின் பிராங்பார்ட்டில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அதிக குடிபோதையில் விமானத்தில் ஏறினார்.ஆனால் விமான நிறுவனம் அவரை விமானத்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவு கூரத்தக்கது.